• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை வாணிபோஜன்..!

Byவிஷா

Jul 27, 2022

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் நாயகி வாணிபோஜன் படவாய்ப்புகள் சரியாக வராததால் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் அடிக்க வைத்திருக்கிறது.
சின்னத்திரையில் தெய்வமகள் எனும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை வாணி போஜன். தமிழ் திரையுலகில் ஓ மை கடவுள் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகிய இவர்,தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வாணி போஜன் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட இவர், மகான் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். படத்தின் நீளம் காரணமாக அவரது காட்சிகள் அனைத்தும் வெட்டி நீக்கப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் பரத்திற்கு ஜோடியாக இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தவிர்த்து தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சிரியசிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், சரியான ஒரு பட வாய்ப்பு அமையாததால், நடிகை வாணி போஜன் அதிரடியான முடிவு ஒன்றை எடுக்கவுள்ளாராம்.
ஆம் கவர்ச்சியாக நடிக்க முடிவெடுத்துவிட்டாராம். தனக்கு ஏற்ற எந்த மாதிரி கவர்ச்சியான கதாபாத்திரங்கள் வந்தால் கூட அதனை ஏற்று நடிக்க முடிவு செய்துவிட்டாராம். இதனை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு கவர்ச்சி எல்லாம் செட் ஆகாது ஹோம்லி லுக் தான் நன்றாக இருக்கும் என தெரிவித்து வருகிறார்கள். வாணிபோஜன் எடுத்த இந்த அதிரடி முடிவு அனைவரையும் ஷாக் அடைய வைத்திருக்கிறது.