கடந்த 2010-ஆம் ஆண்டு, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்க, நடிகர் சந்தானம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருக்கவுள்ளதாம். இந்த இரண்டாவது பாகத்தில் நடிகர் ஆர்யா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என நேற்று ஒரு தகவல் இணையத்தில் வைரலானது.
இது தொடர்பாக ஊடகத்திற்கு பேட்டியளித்த எம்.ராஜேஷ் “பாஸ் என்கிற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட் ஆனதிலிருந்தே அதன் அடுத்த பாகத்தை ஆரம்பிப்பது பற்றி நான், ஆர்யா, சந்தானம் மூன்று பேருமே அடிக்கடி பேசிக் கொள்வோம். எல்லாருக்குமே அப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உண்டு. ரொம்ப வருஷமாகவே நாங்க அதைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால், அந்த படத்தை தொடங்குவது பற்றி இன்னும் எந்த முடிவுக்கும் யாரும் வரவில்லை. அதற்கான சந்தர்பம் அமைய வேண்டும் என்றால், ஆர்யா, சந்தானம் இருவரின் கால்ஷீட்டும் ஒரே நேரத்துல கிடைக்கணும். மற்றபடி அதை ஆரம்பிக்கறது 100சதவீதம் இன்னும் உறுதியாகவில்லை” என பேசியுள்ளார்.
பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்பு..!
