• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கட்சி பணிகள் மேற்கொள்ள இடம் தேடுல் வேட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…

Byகாயத்ரி

Jul 26, 2022

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்தது. இதனால் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அலுவலகத்தை திறக்க அனுமதி கோரி ஈபிஎஸ் – ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் சாவியை பெற்று அதிமுக தலைமை அலுவலகத்தை திறந்தனர். ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி வரை அதிமுக தலைமை கழகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் மீண்டும் அங்கு சென்று கட்சி பணிகளை தொடங்க உள்ளனர். இதனால் கட்சி பணிகளை மேற்கொள்ள ஓபிஎஸ்-க்கு ஒரு இடம் இல்லை. எனவே புதிதாக ஒரு இடத்தில் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கருதுகிறார்கள். இதற்காக சென்னையில் பல்வேறு இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தேடி வருகிறார்கள். உரிய இடம் கிடைத்ததும் அங்கு கட்சி தலைமை அலுவலகம் தொடங்கப்படும் என தெரிகிறது.