• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மின் கட்டண உயர்வு காரணமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

Byvignesh.P

Jul 25, 2022

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஆளும் திமுக தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினர். இந்த கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் மகேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் செல்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.