• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

1500 மின்சார பேருந்துகள்.. டாடா மோட்டர்ஸ் டெண்டரை கைப்பற்றியது..

Byகாயத்ரி

Jul 23, 2022

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு 1500 மின்சார பேருந்துகளை வழங்கும் டெண்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன.

டெல்லியில் முழுமையாக மின்சார பேருந்துகளை மாற்றும் திட்டத்தை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் 1500 மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான டெண்டர் டெல்லி அரசு வெளியிட்டது. இந்த டெண்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பல்வேறு நகரங்களுக்கு 650க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள நிலையில் தற்போது டெல்லிக்கு மேலும் 1500 மின்சார பேருந்துகளை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதால் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க உதவும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.