• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

இன்று நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்படுமா..?
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Byவிஷா

Jul 22, 2022

68வது தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது சூரரைப் போற்று படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து அவர்கள் ட்வீட் செய்து வருவதால் ‘சூரரைப்போற்று’ என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.
ஆஸ்கர் வரை சென்ற சூரரைப் போற்றுக்கு மத்திய அரசு தேசிய விருது அளித்து கவுரவிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சூர்யாவுக்கு மட்டும் விருது கிடைத்தால் இது அவர் பெறும் முதல் தேசிய விருது ஆகும்.
கடந்த ஆண்டு அசுரன் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும், அந்த படத்தில் நடிப்பால் மிரட்டிய தனு{க்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி. இமானுக்கும், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக சிறந்த ஜூரி விருது பார்த்திபனுக்கும், கேடி (எ) கருப்பு துரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும் கிடைத்தது.
கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு அதிகம் விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.