• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் சான்றிதழ் இழந்தவர்களுக்கு மாற்று சான்றிதழ்…!

Byகாயத்ரி

Jul 19, 2022

கனியாமூர் பள்ளி கலவரத்தில் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன என்பதும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் டிசிகள் தீக்கிரையாக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின் சான்றிதழ் இழந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் புதிய சான்றிதழ் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.