• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

தாமரை மாநாடு -அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்

ByA.Tamilselvan

Jul 17, 2022

பல்லடம் அருகே தாமரைமாநாடு என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்- நடைபெறுகிரது அதில் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை மாநாடு என்ற பெயரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லடம் திருச்சி மெயின் ரோடு, பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும் பா.ஜ.க.கொடி கட்டப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் பிரதமர் மோடி, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் அலங்கார பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் கே.சி.எம்.சீனிவாசன், உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்துள்ளனர்.