• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாராந்திர சிறப்பு கட்டண ரயில்

ByA.Tamilselvan

Jul 17, 2022

விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் – நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரையும் வேளாங்கண்ணி வரையும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் நவம்பர் 12 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.