• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்

ByA.Tamilselvan

Jul 15, 2022

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்ந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர், சவுதி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கிடையே, இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்தார். இந்நிலையில் புதிய அதிபரை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும் வரை இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக் கொண்டார்.