• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி மன்ற தலைவர் கலெக்டர் இடம் மனு!

Byகுமார்

Jul 12, 2022

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள திம்மநத்தம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக கோசிமின் என்பவர் பதவி வகித்துவருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பத்திரபதிவு செய்து மோசடியில் ஈடுபடுவதாக கூறி நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஊராட்சி மன்ற தலைவரான ஹோசிமின் என்பவருடன் வந்த ராஜாபாண்டி என்பவர் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் தனது பெயரில் ஊராட்சிமன்ற தலைவருக்கு எதிராக பொய்யான புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.