• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் 113- வது பிறந்த நாள்: உருவ படத்திற்க்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

By

Sep 15, 2021

பேரறிஞர் அண்ணாவின் 113- வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இந்த நிலையில் இந்த மாதம் ஒன்றாம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி காலமானதால் சென்னை செல்ல முடியாத நிலையில் ,மக்களவை உறுப்பினர் ரவிந்திரநாத் அலுவலகத்தின் அண்ணாவின் உருவப்படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

மேலும் ,
மனைவி இறந்து 16 நாட்கள் கூட ஆகாத நிலையில் வீட்டைவிட்டு வெளியில் வராத ஓ.பன்னீர்செல்வம், அண்ணா பிறந்தநாளை கொண்டாடுவதில் இருந்து தவறி விடக்கூடாது என்ற காரணத்திற்காக சம்பிரதாயங்களை மீறி கலந்து கொண்டார்.