• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திடீர் திருப்பம் இபிஎஸ்க்கு செக் வைக்கும் சசிகலா

ByA.Tamilselvan

Jul 4, 2022

அதிமுக ஒற்றைதலைமை பிரச்சனையில் தற்போது சசிகலா அறிவிப்பு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பூதகரமாகிவரும் நிலையில் சசிகலாவின் அறிவிப்பு திடீர் திருப்பதை ஏற்படுத்தி வருகிறது. வரும் 10 ம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழுவுக்கு அனைத்து வேலைகளையும் இபிஎஸ் தரப்பு மும்முரமாக செய்து வருகிறது. ஓபிஎஸ் தரப்பு 10 தேதி கூட்டம் நடைபெறாது ,அப்படியே நடைபெற்றாலும் அது செல்லாது என தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் தொண்டர்கள் புடைசூழ தலைமை அலுவலகத்திற்கு செல்லப்போவதாக சசிகலா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சசிகலாவுடன் தென்மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் தரப்பு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் ,இந்த அதிரடி முடிவை சசிகலா எடுத்துள்ளார். சசிகலா தலைமை அலுவலகம் சென்றால் இபிஎஸ் க்கு பெரும் தலைவலி தான் .