• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் இனி மாஸ்க் அணிவது கட்டாயம்…

Byகாயத்ரி

Jul 1, 2022

10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல அலுவலகங்களில் முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இதனால் பலருக்கும் தொற்று பரவுகிறது. எனவே 3வது தவணையான பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசியை தகுதியானவர்கள் போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.