• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை ஜூன் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ByA.Tamilselvan

Jun 18, 2022

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


அப்போது இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரணையின் போது மொழி பெயர்ப்பாளர் ஆக இருந்த தூத்துக்குடியை சேர்ந்த நல்ஆயன் காது கேளாதோர் பள்ளி ஆசிரியர் சுப்ரமணியனிடம் விசாரணை நடை பெற்றது. இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூன் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.