• Sun. Apr 28th, 2024

மண்வள பரிசோதனை : விவசாயிகளுக்கு அழைப்பு..

By

Sep 11, 2021 , ,

தமிழகத்தில் திருப்பூர், அவிநாசி, தாராபுரம், ஊத்துக்குளி, வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியங்களுக்கு திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டு மண் பரிசோதனை நிலையம் தொடங்கப்பட்டது.

மேலும் 7 ஒன்றியங்களுக்கு நடமாடும் பரிசோதனை நிலையம் தொடங்கவும் கடந்த ஆண்டு 3,200 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,
அதன்படி கடந்த ஜூலை மாத இறுதிக்குள் 3,230 பயனாளிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சுகன்யா கூறுகையில்:

ஏக்கருக்கு 5 இடத்தில், ‘V’ வடிவத்தில் மூன்று அடி ஆழத்திற்கு மண் எடுத்து ஒவ்வொரு அடி மண்ணையும் தனித்தனியாக சேகரித்து கொடுக்கலாம் எனவும் ஒவ்வொரு மாதிரிக்கும் ரூ.20 கட்டணம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 3 வாரத்துக்குள் பரிசோதனை முடிவுடன் மண்வள அட்டை வழங்கப்படும். மேலும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்று தண்ணீரையும் பரிசோதனை செய்யலாம் எனவும் மண்வள அட்டையில் பரிந்துரைத்தபடி பயிர் சாகுபடி செய்யலாம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *