• Mon. Apr 29th, 2024

தங்கம் விலை சரசரவென குறைவு! எவ்வளவு தெரியும்மா ?

தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்ட நிலையில் சவரனுக்கு ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

இதற்கிடையே கடந்த 4-ந் தேதி சவரன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் அன்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்பனை ஆனது.

ஆனால் அதன்பின் விலை குறைய தொடங்கிய நிலையில் கடந்த 6-ந் தேதி முதல் குறைவு காணப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் விலை குறைந்து கொண்டு வந்த நிலையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 608-க்கு விற்றது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,440ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *