• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டியதால் நடந்த விபரீதம்!

By

Sep 10, 2021 ,

செல்போனில்பேசிக்கொண்டே வண்டி ஓட்டியதால் வாசுதேவநல்லூரில் கோரவிபத்து நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள அருளாட்சியிலிருந்து சங்கரன் கோவில் அருகே உள்ள நெடுமன் குளத்திற்கு திருமண வீட்டார் வேனில் மறு வீட்டு அழைப்பிற்காக சென்றுற்றனர். வேன் ஓட்டுனர் சார்லஸ் செல்போனை பேசிக்கொண்டே வேகமாக வண்டியை ஒட்டியதாக கூறப்படுகிறது. வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சர்க்கரை ஆலை முன்பு திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. அமைக்கப்பட்டிருந்த நடுசுவர் மீதுமோதியது இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 22 பேருக்கும் மேற்பட்டோர் வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.