• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்திய ரயில்வே துறையில் 5636 காலி பணியிடங்கள் அறிவிப்பு

ByA.Tamilselvan

Jun 2, 2022

இந்திய ரயில்வேதுறையில் இதுவரை இல்லாத வகையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே 5636 அப்ரண்டீஸ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு பணி என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த பணிக்கு இந்தமாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விபரம் குறிப்பிடப்படவில்லை. இப்பணிக்குவிண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திடம் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தேசிய கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழை (ITI) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மேலும் 24 வயது பூர்த்தியடைந்திருக்கக்கூடாது. ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். Written Exam / Certification Verification / Direct Interview மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
இந்திய ரயில்வேத்துறையின் அதிகாரபூர்வ இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://indianrailways.gov.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

இப்பணிகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://nfr.indianrailways.gov.in/cris//uploads/files/1653892024646-Act%20App%20Notification%202020-23%20Final.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
ரயில்வேதுறையில் எப்போதும் இல்லாதவகையில் அதிக அளவில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்புவெளியாகி இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.