• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கலைஞர் நூலக கட்டிட பணிகள் ஜூன் மாதத்தில் முடிவடையும் -அமைச்சர் ஏ.வ. வேலு பேட்டி

ByA.Tamilselvan

May 19, 2022

வரும் ஜூன் மாதத்திற்குள் கலைஞர் நுலக கட்டிட பணிகள் முடிவடையும் எனவும் மேலும் மதுரை நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு நடைபெற்று வருகிறது என மதுரையில் அமைச்சர் ஏ.வ. வேலு பேட்டி
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ. வ.வேலு,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர்மதுரையில் கட்டி வரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகள் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.முதல்வர் கேட்டு கொண்டதன் அடிப்படையில் கலைஞர் நூலக கட்டிடப்பணியினை ஆய்வு மேற்கொண்டேன்.இதற்கு என ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி போடப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் இந்த கட்டிட வேலை நடைபெற்று வருகிறது என்றார்.இந்த கட்டிட பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து விடும். தற்போது 90% கட்டிட பணி முடிந்துள்ளது.
அடுத்து இன்டீரியர் வேலை நடை பெறும். கலைஞர் நூலகம் என்பதால் விரைந்து பணிகள் நடைபெறுவதாக கூறும் குற்றச்சாட்டு. முற்றிலும் உண்மையல்ல.
மதுரையில் ஸ்மார்ட் (ஸ்மால்) திட்டம் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளம் என்றார்.கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பாலத்திற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடக்கூடிய பணிதான் நடைபெற வேண்டி உள்ளது என்றார்.
மேலும் நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை தடையின்றி செல்ல திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்