• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அணுசக்தி துறை நிர்வாகிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி

ByA.Tamilselvan

May 15, 2022

மத்திய அரசின் பல்வேறு துறைகளைகளுக்கு நடத்தபடுகிற தேர்வுகளில் தமிழுக்கு முக்கியதுவம் அளிப்பதில்லை. அதே போல சில தேர்வுகளுக்கான மையங்களும் தமிழகத்தில் இல்லை.இது போன்ற பிரச்சனைகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் தேர்வு மையம் வழங்கியமைக்காக அணுசக்தி துறை நிர்வாகிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: அணுசக்தி துறை எரி பொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் ஆர். முருகையா அவர்களி டம் இருந்து மே 11 அன்று கடி தம் வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை குறித்து நான் எடுத்த பிரச் சனை ஒன்றில் தீர்வு கிட்டி இருக்கிறது. ஒன்றிய அரசின் தேர்வு மையங்களில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படு வதை குறிப்பிட்டு நான் 29.6. 2021 இல் ஒரு கடிதம் எழுதி யிருந்தேன் அணு எரி பொருள் வளா கம் (Nuclear Fuel Complex) 21.06.2021 இல் வெளியிட்டு இருந்த அறிவிக்கை Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category – I, Post Code 21901- 21911. Advertise ment No. NFC/02/2019 நிய மன முதல்படித் தேர்வுக்காக நாடு முழுவதும் அறிவிக்கப் பட்ட 6 மையங்களில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை ;
தமிழ்நாடு, புதுச் சேரி தேர்வர்கள் பெங்களூ ரில் போய் தேர்வெழுத வேண் டியுள்ளது என்று சுட்டிக் காட்டி இருந்தேன். உயர்கல்வி விகிதத்தி லும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன் றிய அரசு இப்படித்தான் அணு குமா?தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப் பட வேண்டும் என்பதை வலி யுறுத்தி அணுசக்தி துறைக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு வந்துள்ள பதில் தான் முருகையா அவர்களின் கடிதம் (Ref no. R1-14-1/2021/ R-1/1062). அவர் தெரிவித் துள்ள செய்தி இது. “Techinical officer/D/ Advt no NFC/01/2022 பத விக்கான அறிவிக்கைக்கான தேர்வு மையம் ஜிர்கோனி யம் வளாகம், பழைய காயல், தூத்துக்குடி மாவட்டம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு எழுத்துத் தேர்வும் நேர்காண லும் 2022 மே 5-7 தேதிகளில் அணு எரிபொருள் வளா கத்தால் நடத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரி வித்துக் கொள்கிறோம்”. ஓராண்டு ஆனாலும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் வஞ்ச னைகளில் ஒன்றை சரி செய்ய முடிந்துள்ளது.