• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சவர்மாவிற்கு தடை இல்லை…

Byகாயத்ரி

May 14, 2022

தமிழ்நாட்டில் சவர்மாவிற்கு தடை இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட சர்மாவை சாப்பிட்ட மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் சேர்த்து சவர்மா சாப்பிட்ட 18 பேர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதன் மூலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மாணவி உயிரிழந்ததால் கேரளாவில் சர்மா கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரத்தநாட்டில் சவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் தமிழகத்திலும் சர்மாவிற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.