• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

87 வயதில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற ஹரியானா முன்னாள் முதல்வர்…

Byகாயத்ரி

May 12, 2022

87 வயதை அடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

வயது என்பது வெறும் எண் தான் இதனை வாழ்க்கையில் பல பேரும் சொல்வது உண்டு. ஆனால் ஒரு சிலரே அதனை நிஜத்தில் நிரூபித்துக் காட்டுகின்றனர். அவர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா. பள்ளிப்படிப்பை முடிக்காத சவுதாலாவுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பது ஏக்கம். ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்து சவுதாலா அங்கிருந்தபடியே கடந்த 2017 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி உள்ளார். ஆனால் ஆங்கில பரிட்சை மட்டும் எழுதாமல் இருந்திருக்கின்றார். அதனால் சவுதாலா கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வை எழுதிய போதும் அதன் முடிவை அரியானா பள்ளிக் கல்வி வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அந்த தேர்வில் 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆகவே ஒரே தாவலில் பத்தாம் வகுப்பு, முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

இந்நிலையில் சவுதாலாவுக்கான மதிப்பெண்சான்றிதழை மாநில கல்வித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் வழங்கியுள்ளனர். அதனை அவர் பெருமிதத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு சுவாரசியமான தன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானதாக கூறப்படும் தஸ்வி என்ற இந்தித் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்த திரைப்படத்தில் சிறையிலிருக்கும் அரசியல்வாதி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி செய்வது போல கதை அமைந்துள்ளது. தற்போது நிஜ கதாநாயகர் சவுதாலா பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் அவருக்கு ஸ்ரீ விநாயகர் அபிஷேக்பச்சன், நாயகி நிம்ரத் கவுர் போன்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பள்ளிப் படிப்பில் மட்டுமல்லாமல் அரசியலிலும் இந்த வயதில் சவுதாலா ஆக்டிவாக தான் செயல்பட்டு இருக்கின்றார். இந்திய அரசியலில் லோக் தள கட்சித் தலைவரான இவர் இப்போதும் அரியானா மாநிலம் முழுவதும் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார். ஆனால் பட்டப்படிப்பில் தனது நீண்ட கால கனவு நனவான மகிழ்ச்சியில் ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று கூவாத குறையாக குஷியாக உள்ளார் இந்த தாத்தா அரசியல்வாதி.