• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெற்றோரால் பரிதவிக்கும் 13 வயது சிறுவன்

By

Sep 6, 2021

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் ஹமீது, பாத்திமா இவர்களுக்கு 13 வயது மகன் உள்ளான். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனைகள் எழுந்த நிலையில் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து ,சாகுல் ஹமீது இரண்டாவதாக திருமணம் செய்த நிலையில் வட்டக்கரை பகுதியில் வசித்து வந்த‌தாக கூறப்படுகிறது இந்நிலையில், பாத்திமா தனது மகனை அழைத்துச்சென்று, கணவர் சாகுல் ஹமீது வீட்டில் விட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது.

மேலும்,சாகுல் ஹமீது வெளியூர் சென்ற போது ,அவரது இரண்டாவது சிறுவனை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அழுது கொண்டே தெருவில் நின்றுள்ளான். இதற்கிடையே, சிறுவனின் தாய் தனது வீட்டை பூட்டிவிட்டு மாயமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென மயக்கமடைந்த சிறுவன் கீழே விழுந்தான் . இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவன், மனைவி பிரச்சினையில்,, சிறுவன் நடுத்தெருவில் பரிதவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.