• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மாநகர காவல் ஆணையரிடன் மனு

ByA.Tamilselvan

May 6, 2022

மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மதுரை வழக்கறிஞர்கள் குழுவினர் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநகர காவல் ஆணையரிடன் மனு அளித்துள்ளனர்.
தருமபுரி ஆதீனம் பட்டின பிரவேச விவகாரம் குறித்து மதுரை ஆதீனம் பேசிய கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் கருத்தால் இந்து விரோத சக்திகளால் ஆதினத்துக்கு ஆபத்து நிகழும் சூழல் உருவாகி உள்ளதாகவும், ஆதீனத்துக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும்,மதுரை ஆதீன மடம் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவம் கூறி மதுரை ஆதினத்துக்கும், மடத்திற்க்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு” மதுரை வழக்கறிஞர்கள் குழுவினர் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநகர காவல் ஆணையரிடன் மனு அளித்துள்ளனர்.