• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இனி தடையில்லா மின்சாரம்…அரசு அறிவிப்பு…

Byகாயத்ரி

May 3, 2022

தமிழகத்தில் வருகின்ற மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகின்றது. இந்தநிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங்கி இருக்கின்ற நிலையில் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.

சுற்றறிக்கையில், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகேயுள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றவும் மின்வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.