• Sat. May 4th, 2024

தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- மின்வாரியம் உத்தரவு

ByA.Tamilselvan

May 3, 2022

பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என மின்சாரவாரியம் உத்தவிட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக 10,11,12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும்.கொரோனா காரணமாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டது.எனவே தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது.இந்நிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங் உள்ள நிலையில் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.சுற்றறிக்கையில், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.மேலும், பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகேயுள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *