• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஷாருக் கான் பட செட்டில் யோகி பாபு!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பட படப்பிடிப்புத் தளத்தில் தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே யோகி பாபு, அந்த படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி வந்தன.