• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

செவ்வாய் கிரகத்தில் கிடைத்த மர்மப்பொருள் -ஹாக்கான நாசா விஞ்ஞானிகள்

ByA.Tamilselvan

Apr 28, 2022

நிலவுக்குமனிதர்களை அனுப்பியதை போல வரும் 10 ஆண்டுகளில் செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடிவுசெய்துள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.அதற்காக பல்வேறு ராக்கெட்டுகளை அனுப்பி ஆய்வு செய்துவருகிறது.
, கடந்த 2021இல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா ராக்கெட் ஒன்றை அனுப்பி இருந்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்தை ஆய்வு செய்ய பெர்ஸெவேரன்ஸ் என்ற ரோவர் மூலம் Ingenuity helicopter என்ற ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டது. வேற்றுகிரகம் ஒன்றில் முதல்முதலாக பறந்த ஹெலிகாப்டர் இதுதான்.ஒராண்டிற்கும் மேலாக இந்த Ingenuity helicopter அங்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
Ingenuity helicopter இதுவரை 25 முறை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் 26ஆவது முறையாகச் சமீபத்தில் பயணித்தது. அப்போது அது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முக்கோண வடிவில் அமைப்பு ஒன்றைக் கண்டுபிடித்தது. வெள்ளை நிறத்தில் கூம்பு போன்ற வடிவில் இருந்த அந்த அமைப்பைக் கண்டு விஞ்ஞானிகள் முதலில் குழம்பிவிட்டனர். வேற்றுகிரகவாசிகளின் குடியிருப்பாக இருக்குமா ,அல்லது வேறு எதேனும் மர்மப்பொருளா என திகைத்து போயினர்.பின்னர், அது என்னவென்று தெரிந்து பின்னரே நிம்மதி அடைந்தனர். அந்த வெள்ளை நிற கூம்பு போன்ற அமைப்பு வேறு எதுவும் இல்லை. Ingenuity helicopter மார்ஸில் தரையிறங்க உதவிய பெர்ஸெவேரன்ஸ் ரோவரின் மீத பாகங்கள் தான் அவை. அதன் பின்னரே ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். செவ்வாய் கிரகத்தில். முதலில் ரோவர் தரையிறங்கிய போது, இந்த பேக்ஷெல் தான் அதைப் பாதுகாத்தது என்பது குறிப்பிடத்தக்தது.