• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

KGF-2′, ‘RRR’ படங்கள் ஓடியிருந்தாலும் அதில் லாபம் வந்திருக்காது”ஜோசியம் சொன்ன இயக்குநர் ராஜ்கபூர்

“KGF-2, RRR ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியிருந்தாலும், அவைகளால் லாபம் கிடைத்திருக்காது” என்று இயக்குநர் ராஜ்கபூர் கருத்துத் தெரிவித்துள்ளார்.23.04.2022 அன்று சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்ற ‘மெய்ப்பட பேசு’ என்றபடத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.
இந்த விழாவில் நடிகர் ராஜ்கபூர் பேசும்போது, “இந்தப் படத்தை மிக அருமையாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் பரணி இசையில் அசத்தியுள்ளார். இப்போதெல்லாம் இப்படி பாடல்களைக் கேட்பது அரிதாகிவிட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது ‘மாயாண்டி குடும்பத்தார்’ படம்தான் என் ஞாபகத்திற்கு வந்தது. இயக்குநர் ஒரு நாளில் ஒரு சீன்தான் எடுப்பார். அதையும் ரசிச்சு எடுப்பார்.‘கே.ஜி.எஃப். ஓடுச்சு’. ‘ஆர்.ஆர்.ஆர்.ஓடுச்சு’ என்கிறார்கள். ஆனால் அது ஓடியதால் என்ன பயன்..? அந்தப் படங்களை நாலு வருடமாக எடுத்தார்கள். அதெல்லாம் லாபமே தராது. ‘மைனா’ படம் 2 கோடியில் எடுத்து பல கோடி லாபம் பார்த்தது. அதுதான் படம். ஓடுது, ஓடுது என சொல்லும் படத்தில் கதை என்ன என்று கேளுங்கள். அவற்றில் கதையே இருக்காது. ‘ஜெய் பீம்’ எல்லாம் சின்ன பட்ஜெட்டில் எடுத்து உலகத்தையே மிரட்டியது. அது மாதிரி இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.