• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்த வெற்றி தீபத்தை கார்கில் போரில் மறைந்த மேஜர் சரவணன் சதுக்கத்தில் வைத்து ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்…

Byadmin

Jul 19, 2021

1971ம் ஆண்டில் பாக்கிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்த வெற்றி தீபத்தை கார்கில் போரில் மறைந்த மேஜர் சரவணன் சதுக்கத்தில் வைத்து ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

1971ம் ஆண்டு நடைபெற்ற பாக்கிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது – இந்நிலையில் இதன் 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலை நகர் டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் வெற்றி தீ பந்தத்தை( “ஸ்வர்னீம் விஜய் மஷால்” ) ஏற்றி வைத்தார்.

இந்த வெற்றி தீபம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற நிலையில் இன்று காலை கார்கில் போரில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் சதுக்கத்தில் “ஸ்வர்னிம் விஜய் மஷால்” வெற்றி தீபமானது ஊர்வலமாக ஏற்றப்பட்டது. பின்னர் ராணுவத் துறை அதிகாரிகள் அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தீபமானது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டு இறுதியாக டிசம்பர் 16ஆம் தேதி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு 50 வது வெற்றி விழா சிறப்பாக கொண்டாடப்படும் என ராணுவத்தை துரை அதிகாரி கரன்வீர் சிங் தெரிவித்தார்..