• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தானியங்கி முறையில் கட்டட அனுமதி பெறும் முறை அமல்..

Byகாயத்ரி

Apr 20, 2022

தானியங்கி ஒற்றை சாளர முறையில் கட்டடம் கட்ட அனுமதி பெறும் முறை வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குடும்பம் மற்றும் நகர்ப்புற ஊராக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டி இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு அலைச்சல் அதிகம் இருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து கட்டடம் கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஒற்றை சாளர முறையில் வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி ஒற்றை சாளர முறையில் அதுவும் தானியங்கி முறையில் கட்டட அனுமதி பெறும் முறை வருகின்ற மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மே 1ம் தேதி முதல் கட்டடங்களுக்கு அனுமதி பெறவில்லை பிபோர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தால் போதுமானது என்றும் நேரில் வரத்தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.