• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு வரும் 14ம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள் ) விதிகள் 2003, விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி ஆகியவைகளின்கீழ் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல் 3ஏ, எப்எல்3 ஏஏ உரிமம் பெற்ற மதுபான கூடங்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் வரும் 14ம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்களில் மது விற்பது கண்டுபிடிக்க பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.