• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் பரபரப்பு….. ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிகள் சேதம்…

சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான துணி கடை உள்ளது. இரவு பூட்டப்பட்டிருந்த இந்தக் கடையில் இருந்து கரும்புகை யுடன் தீ பரவியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென தீ பரவியது. இதனால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டது.

இதனைக் கண்ட அப்பகுதியினர், தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் தீயில் கருகி சேதமடைந்தன. தீயினால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக, அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது..