• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர்ளுக்கான கோடை விடுமுறை குறைப்பு…

Byகாயத்ரி

Apr 9, 2022

தமிழகத்தில் கொரோனா காரணமாக 1- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையில் வழக்கமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறும். இதையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் கொரோனா காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத்தேர்வுகள் மற்றும் இறுதித்தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெற இருக்கின்றன. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5-28 ஆம் தேதி வரை நடைபெறும்.

இதையடுத்து 11 ஆம் வகுப்புக்கு மே மாதம் 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்புக்கு மே மாதம் 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 6- 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனிடையே 1-5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-2023) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் 1- 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருட பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.