• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நித்தியானந்தாவுக்கு ஜெயில் கன்பார்ம்!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவை அடுத்து புதிய ஆதீனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஆனால் நித்தியானந்தாவே தனக்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டு மதுரை ஆதினம் தான் எனக் கூறி வருகிறார்.
இதனிடையே, மதுரை ஆதீன மடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, மதுரை 293-வது ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய பேசியதாவது: மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறேன். கிராம கிராமமாக சென்றுள்ளேன். அரசே ஆலையத்திற்கு வெளியேறு என்ற போராட்டத்துக்கு கன்னியாகுமரில் இருந்து சென்னை கோட்டை வரை நடந்தே வந்தேன் என தெரிவித்தார்.

அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நான் தொடர்பில் தான் இருக்கிறேன். நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை, அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார் என செய்தியாளர்கள் எனத் தெரிவித்தார். சமய நல்லிணக்க மாநாடு போன்று ஒரு நிகழ்ச்சியில் வரும் காலத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்தால் நீங்கள் செல்வீர்களா? என்ற கேள்விக்கு, அழைப்பு விடுதல் போகலாம், ஆனால், அவர்கள் நம் சமயத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுப்பினார்.