• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆசிரமம் தொடங்கியுள்ள சர்ச்சை பெண் சாமியார்

சமூக வலைதளங்களில் வைரலான பெண் சாமியார் அன்னபூரணி திருவண்ணாமலையில் ஆசிரமம் தொடங்கியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற சாமியார் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார் தான் அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மீக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தன்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது, குறைந்த அளவில் பணம் செலவழித்து இந்த இடத்தை வாங்கியதாகவும் இந்த இடத்தில் வரும் பொதுமக்களுக்கு ஆன்மீகம் மற்றும் அதனை சார்ந்து வரும் அனைத்து விஷயங்களையும் பயிற்சி தருவதாக தெரிவித்தார்.

ஆன்மிகம் என்றால் அதற்கான தனி ஆடை அணிய தேவையில்லை, உணவு பழக்க வழக்கங்கள் எதுவும் தேவை இல்லை, ஆன்மீகமும் நடைமுறை வாழ்க்கையும் ஒன்றுதான் என்பதை புரியவைக்க உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அன்னபூரணி அரசு என்ற பெண் சாமியார் பல்வேறு சம்பவங்களில் சிக்கி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது புதியதாக திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.