• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓனர் அவங்க தான்.. ஆனா நாங்க சொல்றது தான் கேக்கணும்… ஸ்டாலின் புது ரூட்

புதுடெல்லியில் நேற்றைய தினம் திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சோனியா காந்தி தலைமையில் இரவு டின்னர் நடந்துள்ளது.

சரி இதுல என்ன தகவல் இருக்குனு தான கேக்குறீங்க, இதுல தான் ஒரு பெரிய விஷயமே நடந்துருக்கு. நேற்றைய தினம் நடந்த விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க வில்லை. அதற்கு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்தியஅமைச்சர்களை சந்தித்து பேசியது , அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியது என பல காரணத்தை கூறுகின்றனர். இதனால் அப்செட் ஆன ராகுல் காந்தி திறப்புவிழாவில் பங்கேற்கவில்லையாம். மேலும் நான்கு நாள் பயணம் மேற்கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்றைய தினம் விழாவில் பங்கேற்று பேசியது தான் அதற்கு முன்பு சந்தித்து எந்த வித ஆலோசனையும் நடத்தவில்லை. நடுவில் ஒரு முறை சந்தித்த போது கூட உங்களுக்கு வணக்கம் சொல்ல தான் வந்தேன் என கூறி மழுப்பினார் முதல்வர் ஸ்டாலின்.

சரி காங்கிரசை மாற்றான் தாய் பிள்ளையாக நடத்த காரணம் என்ன ? இதற்கான பதிலும் அனைவரும் அறிந்த ஒன்று தான். காங்கிரஸ் தற்போது தனது செல்வாக்கை இழந்து விட்டது. 2024 தேர்தலுக்கு இப்போது இருந்தே எதிர்கட்சிகள் தயாராகிவிட்டனர். ஆனால் காங்கிரஸ் மட்டும் தான் இன்னும் தனது உள்கட்சி பிரச்சனையை சரி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.மம்தா , சந்திரசேகர ராவ் , உத்தவ் தாக்கரே என பல் முக போட்டி நிலவுக்கிறது. பாஜகவை வீழ்த்த இவர்கள் தனித்து நின்றால் போதாது ஒன்று சேர்ந்தால் தான் ஒரு பிரமாண்டமான அணி உருவாகும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.ஆனால் இவர்கள் யாரும் காங்கிரஸ் தலைமை தாங்குவதை விரும்ப வில்லை.அனைவரும் தங்கள் தலைமையை தான் காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்று ஆசை படுகின்றனர்.

கிட்ட தட்ட திமுகவும் அந்த நிலைக்கு வந்து விட்டது. காங்கிரஸ் கொஞ்சம் நஞ்சம் செல்வாக்கு பெற்றிருப்பது தமிழகத்தில் உள்ள மாநில கட்சியுடன் தான் அப்படி இருக்க திமுக சொல்வதை கேட்டு நடந்தால் ஒன்று இரண்டு எம் பி சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளது.அதனால் திமுக சொல்வதை கேட்டே தீர வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. இதனால் மற்றவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இறங்கி உள்ளார். திமுக தலைமை அடுத்த அதிரடி ஆட்டம் என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை காலம் தான் முடிவு செய்யும்.