• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஒரு வார வசூலில், ஆர்ஆர்ஆர் படத்தின் சாதனை!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்களில் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடி கொண்டிருக்கிறது ஆர்ஆர்ஆர் படம். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், சமுத்திரகனி, ஆலியாபட், ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்!

இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து சிறப்பான நடிப்பை அளித்தனர். ஆலியா பட்டின் கேரக்டர் வீணடிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பாக ஓடிவரும் ஆர்ஆர்ஆர் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. தற்போது வரை இந்தப்படம் 750 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இந்த வசூலை ஆர்ஆர்ஆர் சாதித்துள்ளது.