• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓடிடி தளங்களுக்கும் விரைவில் தணிக்கை?

திரைப்படங்களுக்கு இருப்பது போல் ஓடிடி படங்களுக்கும் தணிக்கை கொண்டு வர வேண்டும் என மாநில அளவில் பிஜு ஜனதாதள உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஓடிடி தளங்கள் தங்களுக்கு இருக்கும் சென்சார் இல்லை என்ற சலுகையை பயன்படுத்தி ஆபாசமான படங்களை வெளியிட்டு வருவதாகவும் இதனால் இளைய தலைமுறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்

மேலும் ஓடிடி தளங்கள் மத நல்லிணக்கத்திற்கு எதிரான காட்சிகளையும் காட்டுவதாகவும், எனவே திரைப்படங்கள் போலவே ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் தணிக்கை முறை வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பிஜு ஜனதாதள உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது