• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பேட்டரி பைக் வெடித்து தந்தை – மகள் பலி

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவு சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த பேட்டரி பைக் வெடித்து ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால் கேபிள் டிவி அப்பரேட்டர் துரை வர்மா ( 49), அவரது மகள் மோகன பிரீத்தி (13) உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவில் வசிப்பவர் கேபிள் டிவி அப்பரேட்டர் துரைவர்மா (49). இவரது மகள் மோகன பிரீத்தி (13) போளூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக எலெக்டிரிக்கல் பேட்டரியில் ஓடும் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார்.

கடந்த 25ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் உள்ளே எலக்ட்ரிக் பைக்கை, சார்ஜ் போட்டுவிட்டு தனது படுக்கை அறைக்கு சென்று தந்தையும் மகளும் உறங்கச் சென்று இருக்கிறார்கள். மறுநாள் அதிகாலை மூன்று மணியளவில் நேரத்தில் மின் இணைப்பில் இருந்த அந்த எலக்ட்ரிக் பைக் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததோடு கரும்புகை பரவிய நிலையில், எலெக்ட்ரிக்கல் ஸ்கூட்டரும், அருகிலிருந்த மற்றொரு பைக்கும் தீ பிடித்து எரிந்து வீடு முழுவதும் கரும்புகை பரவியுள்ளது.

இதனால் செய்வதறியாது பதற்றம் அடைந்த துரை வர்மா தனது மகள் மோகன பிரீத்தி உடன் வீட்டை விட்டு வெளியேற இயலாததால் கழிவறைக்குள் சென்று தஞ்சமடைந்தார். இருப்பினும், கரும்புகை நச்சுப் புகையாக மாறி தந்தையும் மகளும் மூச்சுவிட சிரமப்பட்டு கழிவறைக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.