• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரபல நடிகைக்கு செப். 9 வரை சிறை தான் – நீதிமன்றம் அதிரடி

By

Aug 27, 2021 ,

நடிகை மீரா மிதுனின் நீதிமன்றக் காவல் செப். 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் நீதிமன்றக் காவலை, வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை நீட்டித்து, சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
தமிழ் திரைப்பட நடிகை மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாக பேசியதோடு, அந்த ஜாதியைச் சோந்த திரைப்பட இயக்குனகள், நடிகா், நடிகைகளை பற்றி இழிவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மத்தியக் குற்றப் பிரிவின் கீழ் இயங்கும் சைபா் குற்றப் பிரிவினா், நடிகை மீரா மிதுன் மீது எஸ்.சி., – எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுனை, கேரள மாநிலம் ஆலப்புழையில், கடந்த 14-ம் தேதி போலீசார் கைது செய்தனா். இதேபோல மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்த அம்பத்தூரைச் சேர்ந்த அவரது நண்பா் அபிஷேக்கை கடந்த 15-ம் தேதி போலீசார் கைது செய்தனா். இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் நீதிமன்றக் காவலை, வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.