தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்ட செய்தியில்,
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வருவதால், அவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)