சென்னை அரும்பாக்கத்தில் முதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் சுப்பையாவை காவல்துறை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், நீதிபதி மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கினார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஓத்தி வைத்தார்.