• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் பகவந்த் மான் தலைமையில் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் கடந்த புதன்கிழமை பதவியேற்ற நிலையில் அமைச்சர்கள் பதவியேற்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒரு பெண் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.