• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாட்டில் அதிகரிக்கும் இளைஞர் வேலைவாய்ப்பின்மை..

நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது.

அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல்,மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக இருந்தது.

அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக இருந்தது. பெண்களிடம் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவிகிதத்தோடு காஷ்மீர் முதல் இடத்திலும், 59 சதவிகிதத்தோடு கேரளா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கான வேலை வாய்ப்பின்மை 50%-ற்கும் மேல் இருந்தது.

நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் நீடித்தாலும் 2020-2021 -ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் 20.8 சதவிகிதத்தோடு ஒப்பிடுகையில் 2021-2022 -ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் 12.6% -ஆக குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.