• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மக்களுக்கு எம்.பி.வெங்கடேசன் சொன்ன குஷியான செய்தி!

Venkatesan

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தை 167 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் காத்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது எம்.பி. வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் பேருந்து நிலைய மறுசீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்டதை விட அதிகமான காலம் எடுத்துள்ளதால் , கால தாமதம் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பேருந்து நிறுத்தம் செய்யும் பணிகள் 1 மாத காலத்திற்குள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்  என தெரிவித்தார். மேலும் ரயில் நிலையத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் நேரடியாக வந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான திட்ட அறிக்கையை ரயில்வே தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த திட்ட குளறுபடி தொடர்பாக செப்.17 ஆம் தேதி நடைபெறும் எனவும் ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும், எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், இப்படி ஒரு திட்டத்தை வகுத்த முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறு தொடர்பாக விசாரிப்பது குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் பேசுவதாக தெரிவித்தார்.