• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கே.டி.ராகவன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது – சவுக்கடி கொடுத்த சபரிமாலா!

By

Aug 25, 2021
Sabarimala

நீட் தேர்வு பிரச்சனையில் மாணவி அனிதா இறந்தபோது மேடை போட்டு பேசியவர்கள் இப்போது பாலியல் பிரச்சனையில் சிக்கியுள்ளது ஒரு பேசு பொருளே அல்ல என பெண்ணுரிமைப் போராளி சபரிமாலா நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் நபிகள் நாயகம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மும்மதத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பெண்ணுரிமைப் போராளி சபரிமாலா கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது “நீட் தேர்வு” பிரச்சினையால் அனிதா இறந்தபோது அவர் மார்க் பிரச்சனையால் இறந்தாரா அல்லது காதல் பிரச்சினையால் இறந்தாரா என நாக்குக் கூசாமல் கேள்வி எழுப்பினார்கள். இதேபோன்று மதுரையில் மாணவி ஜோதி இறந்தபோதும் அவர் எழுதி வைத்த கடிதத்தில் உள்ள தவறை குறிப்பெடுத்து விமர்சனம் செய்தார்கள். இந்நிலையில் பாஜக கட்சி நிர்வாகியான கே.டி .ராகவன் பாலியல் பிரச்சனையில் சிக்கி உள்ளார்.

இக்காரணத்தால் அவர் கட்சியை விட்டு விலகினாரா அல்லது கட்சியிலிருந்து அவரை விலக்கினார்களா என்பதை பேசுபொருள் ஆக்குவது தவறு. இதுபோன்ற பிரச்சனைகளை பெரிதாக்குதல் எந்தவித பிரயோஜனமும் இல்லை என தகவல்கள் தெரிவித்தனர்.