• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உக்ரைனிலிருந்து கொடைக்கானல் திரும்பிய மாணவி!

Byசிபி

Mar 8, 2022

உக்ரைனில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரஷ்யாவினர் போர் நடத்தி வந்தனர். இதனையடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் உயிருக்கு பயந்து பதுங்கு குழியில் சிக்கி தவித்து வந்தனர். இதனையடுத்து இந்திய மாணவர்களை மீட்க ம‌த்திய‌ மாநில அரசுகள் பலவேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு மாணவர்களை மீட்டு வருகின்றனர்.

இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியை சேர்ந்த சகாயம் என்பவரின் மகள் வியானி, உக்ரைன் தலைநகரில் கீவ் பகுதியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் ரஷியாவின் படையெடுப்பின் காரணமாக பதுங்கு குழியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இருந்ததாகவும், மத்திய ம‌ற்றும் மாநில‌ அரசுக‌ள் மீட்பு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விமானம் மூலம் டெல்லி வந்த மாணவி இன்று கொடைக்கானலை வந்தடைந்தார். தனது தாயை கண்டதும் ஓடி சென்று கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.