• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

புகழ்பெற்ற இயக்குனர் பாலியல் வழக்கில் கைது!

நிவின் பாலி நடித்த ‘படவேட்டு’ படத்தின் டைரக்டர் லிஜு கிருஷ்ணா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டைரக்டர் லிஜு கிருஷ்ணா, நிவின் பாலி நடித்த படவேட்டு படத்தை இயக்கி டைரக்டரானார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், அதிதி பாலன், நிவின் பாலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன்னி வேனி தயாரித்துள்ள இந்த படத்திற்கு லிஜு தான் கதை எழுதி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படவேட்டு படம் இந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பட ஷுட்டிங்கின் போது படக்குழுவை சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது பற்றி போலீசார் தரப்பில் கூறுகையில், லிஜு கிருஷ்ணா மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி புகார் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது. ஆனால் அந்த பெண் திரைத்துறையை சேர்ந்தவர் அல்ல. அதே சமயம் படக்குழுவில் ஒருவருக்கு அவர் நன்கு பழக்கமானவர் என தெரிவித்துள்ளனர்.

லிஜு தற்போது, தனது அடுத்த படத்தின் ஷுட்டிங் நடக்கும் கன்னூர் பகுதியில் இருந்து வந்தார். அவரை ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். டைரக்டர் லிஜு மட்டுமல்ல கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞரான சுஜீஸ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் வாடிக்கையாளர்கள் 6 பேர் பாலியல் புகார் அளித்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக தனது வழக்கறிஞரை பார்க்க அவரின் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில் மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.